மாவட்ட செய்திகள்

வேலை வழங்கக்கோரி தற்கொலை எண்ணத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி + "||" + The Collector office came with the suicide idea

வேலை வழங்கக்கோரி தற்கொலை எண்ணத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி

வேலை வழங்கக்கோரி தற்கொலை எண்ணத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி
அரசு வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கலெக்டர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர், ஜூன்.13–

வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 31). இவரது மனைவி பார்வதி (27). இருவரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு ஷியாமளா(4) என்ற பெண் குழந்தையும், 1½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சின்னத்தம்பி கடந்த 2014–ம் ஆண்டு முதல் அரசு உதவித்தொகை பெற்று வருகிறார். இவர் தனக்கு அரசு வேலை வழங்கக்கோரி கடந்த 1998–ம் ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து வருகிறார். ஆனால் இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். தனக்கு அரசு வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்கவே போலீசார் சின்னத்தம்பியையும் அவரது குழந்தைகளையும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர். அதிகாரிகள் அவரது கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சின்னத்தம்பியையும் அவரது குழந்தைகளையும் அனுப்பி வைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. செல்போனுக்கு அடிமையான சிறுமி தற்கொலை : தாய் கண்டித்ததால் விபரீதம்
தாய் கண்டித்ததால் செல்போனுக்கு அடிமையான சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
2. மானியத்தில் ஸ்கூட்டர் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வீரராகவராவ் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்தில் ஸ்கூட்டர் பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
3. கணவர் பானிபூரி வாங்கி கொடுக்காததால் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை
கணவர் பானிபூரி வாங்கி கொடுக்காததால் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு
புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது என்று கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
5. விவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில் நுட்ப திட்டம் -கலெக்டர் தகவல்
விவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில்நுட்ப மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் கூறினார்.