புளியந்தோப்பில் கத்திமுனையில் வாலிபரிடம் வழிப்பறி செய்த கொலை குற்றவாளி கைது


புளியந்தோப்பில் கத்திமுனையில் வாலிபரிடம் வழிப்பறி செய்த கொலை குற்றவாளி கைது
x
தினத்தந்தி 13 Jun 2018 3:45 AM IST (Updated: 13 Jun 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

புளியந்தோப்பில் கத்திமுனையில் வாலிபரிடம் வழிப்பறி செய்த கொலை குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் அவரை போலீசார் கண்டுபிடித்து சுற்றிவளைத்து பிடித்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் 8-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது 30). இவர் நேற்று காலை புளியந்தோப்பு அருகில் பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் நடந்து வந்தார். அப்போது அவர் அருகே வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2,300-ஐ பறித்து சென்றார்.

இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் ஆல்பர்ட் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது ஆல்பர்ட்டிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது பழைய குற்றவாளி ராசாத்தி என்ற இளம்பரிதி என்பது தெரியவந்தது. இவர் புளியந்தோப்பு சிவராவ் பகுதியில் பதுங்கியிருந்ததை அறிந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இவர் மீது பேசின்பிரிட்ஜ், ஓட்டேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 48 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதில் 2 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்டவை ஆகும். இவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story