குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் பிரசார பயணம்


குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் பிரசார பயணம்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:30 PM GMT (Updated: 12 Jun 2018 8:40 PM GMT)

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் பிரசார பயணம் மேற்கொண்டனர்.

சுந்தரக்கோட்டை,

குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த நிரந்தர தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்தின் தண்ணீர் உரிமையினை பெற்று தர வேண்டும். குறுவைக்கு தண்ணீர் இல்லை என்றால் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று மாவட்டம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்வது என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி மன்னார்குடி ஒன்றியத்தில் சவளக்காரனில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிரசார பயணம் நேற்று நடந்தது. இதற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பிரசார பயணத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி தொடங்கி வைத்தார். இதில் மாணவர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன் பேசினார். பிரசார பயணத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாரியப்பன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரவள்ளி, மாணவர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாலமுருகன், மாதர் சங்க நிர்வாகிகள் பூபதி, ஈஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், கிளை செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சவளக் காரனில் தொடங்கிய பிரசார பயணம் மன்னார்குடி ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது. 

Next Story