உணவு பொருட்களின் தரம் குறித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் செய்யலாம்


உணவு பொருட்களின் தரம் குறித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் செய்யலாம்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:00 PM GMT (Updated: 12 Jun 2018 9:47 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்-

உணவு பொருள் தயாரிப்பாளர்கள், பொட்டலம் கட்டுபவர்கள் உணவு பொருட்களை முகப்புச்சீட்டு (லேபிள்) இல்லாமல் பொட்டலம் கட்டக் கூடாது. அவ்வாறு முகப்புச்சீட்டு இல்லாத பொட்டலத்தில் உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

அதை மீறினால் கடையின் உரிமையாளர், விற்பனையாளர், தயாரிப்பாளர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் அபராதம் விதிக்கப்படும். மேலும் உணவு பொருட்களின் பொட்டலத்தில் உணவு பொருளின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, நிறுவனத்தின் முகவரி, தொகுதி எண், எடை அளவு, சைவ அல்லது அசைவ குறியீடு, ஊட்டச்சத்து தகவல்கள், உணவு பொருளில் சேர்க்கப்படும் பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட நாடு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் வழங்கப்படும் உரிமம் போன்றவை இல்லாத உணவு பொருட்களை விற்பனை செய்யக்கடாது.

அதேபோல் உணவு பொருட்களை வாங்கும் போது, மேற்கண்டவை இருக் கிறதா? என்பதை நுகர்வோர் சரிபார்க்க வேண்டும். மேலும் உணவு பொருட்கள் தரம் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story