அரக்கோணத்தில் ஜாக்டோ, ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்


அரக்கோணத்தில் ஜாக்டோ, ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2018 4:07 AM IST (Updated: 13 Jun 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பாக ஜாக்டோ, ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வி.என்.பார்த்திபன் தலைமை தாங்கினார்.

அரக்கோணம்,

தேவராஜ், சிவராமன் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் தாஸ்பிரகாஷ், பெனாசிர், எலிசபெத் உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோபிநாதன், ஞானசேகரன், நேரு ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Next Story