மாவட்ட செய்திகள்

குமாரசாமியுடன் ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் சந்திப்பு + "||" + Meeting of garment workers Of Kumaraswamy

குமாரசாமியுடன் ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் சந்திப்பு

குமாரசாமியுடன் ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் சந்திப்பு
முதல்-மந்திரி குமாரசாமியை ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் சங்க தலைவர் பிரதீபா தலைமையில் நேரில் சந்தித்து பேசினர்.
பெங்களூரு,

தொழிலாளர்கள், தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தங்களின் வாழ்க்கை தரம் இன்னும் மேம்படாமல் அப்படியே தான் உள்ளது. சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் முதல்-மந்திரியிடம் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய குமாரசாமி கூறியதாவது:-


உங்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது குறித்து ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவன உரிமையாளர்களை அழைத்து பேசுவேன். உங்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க வருகிற 18-ந் தேதி தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவன நிறுவனங்களின் உரிமையாளர்களின் கூட்டம் கூட்டப்படும். அந்த கூட்டம் வெற்றிகரமாக அமையும். இருதரப்பினரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா?
கர்நாடகத்தில், தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதனால் அங்கு குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
2. கர்நாடகத்தில் அரசு-தனியார் பங்களிப்பில் ஏரிகள் மேம்படுத்தப்படும் குமாரசாமி அறிவிப்பு
கர்நாடகத்தில் அரசு-தனியார் பங்களிப்பில் ஏரிகள் மேம்படுத்தப்படும் என்றும், பெங்களூருவில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார்.
3. என் மகன் மீது சத்தியமாக விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் பதவியை விட்டு போக மாட்டேன் : குமாரசாமி பேச்சு
என் மகன் மீது சத்தியமாக விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் நான் பதவியை விட்டு போக மாட்டேன் என்று குமாரசாமி உருக்கமாக கூறினார்.
4. ஜி.எஸ்.டி. திட்டத்தில் இந்த ஆண்டு மத்திய அரசு வழங்கும் இழப்பீடு குறைவாக இருக்கும் - குமாரசாமி தகவல்
ஜி.எஸ்.டி. திட்டத்தில் இந்த ஆண்டு மத்திய அரசு வழங்கும் இழப்பீடு குறைவாக இருக்கும் என்று சட்டசபையில் குமாரசாமி கூறினார்.
5. சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் எம்.எல்.ஏ.க்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதிப்பது குறித்து மத்திய அரசுடன் விவாதிக்கப்படும் - குமாரசாமி தகவல்
சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் தாலுகா தலைநகரங்களில் எம்.எல்.ஏ.க்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதிப்பது குறித்து மத்திய அரசுடன் விவாதிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.