தனியார் நிறுவன ஊழியருக்கு அடி-உதை 5 பேர் மீது வழக்கு


தனியார் நிறுவன ஊழியருக்கு அடி-உதை 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Jun 2018 6:04 AM IST (Updated: 13 Jun 2018 6:04 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள கல்லம்பேடு காலனியை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 43). இவர் அதே பகுதியில் உள்ள நித்தியாபதி என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

திருவள்ளூர்,

நேற்று முன்தினம் நித்தியாபதி தனது காரில் கல்லம்பேடு அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது காரை வழி மறித்த அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன், அவரது மகன்கள் ராஜன், விக்னேஷ், உறவினர்கள் ஆரோன், எட்வின் ஆகியோர் அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்கினார்கள்.

இதைபார்த்த கிருபாகரன் அவர்கள் 5 பேரையும் ஏன் அடிக்கிறீர்கள் என தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கிருபாகரனையும் அவருடன் இருந்த நண்பர் சீமோன் என்பவரையும் அடித்து உதைத்து விட்டு தப்பி சென்று விட்டார்கள்.

இதுபற்றி கிருபாகரன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூரை அடுத்த குத்தம்பாக்கத்தை சேர்ந்தவர் தசரதன் (75). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த பகையை மனதில் வைத்து கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி கையால் தாக்கியுள்ளார்.

இதுபற்றி தசரதன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் நவீன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story