வணிக நிறுவனங்கள் லாப நோக்கத்தில் பரிசு குலுக்கல் திட்டங்கள் நடத்துவது சட்டத்துக்கு புறம்பானது மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு


வணிக நிறுவனங்கள் லாப நோக்கத்தில் பரிசு குலுக்கல் திட்டங்கள் நடத்துவது சட்டத்துக்கு புறம்பானது மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2018 9:00 PM GMT (Updated: 13 Jun 2018 1:09 PM GMT)

வணிக நிறுவனங்கள் லாப நோக்கத்தில் பரிசு குலுக்கல் திட்டங்கள் நடத்துவது சட்டத்துக்கு புறம்பானது என்று தூத்துக்குதிட்டங்கள் நடத்துவது சட்டத்துக்கு புறம்பானது மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்புடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

வணிக நிறுவனங்கள் லாப நோக்கத்தில் பரிசு குலுக்கல் திட்டங்கள் நடத்துவது சட்டத்துக்கு புறம்பானது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

பரிசு போட்டி

பரிசு போட்டிகள் தடைச்சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டு திட்டங்கள் மற்றம் பண சுழற்சி திட்டங்கள் (தடை) சட்டம் 1978, தமிழ்நாடு பரிசு திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகிய 3 சட்டங்களின்படி, விற்பனையை அதிகரிக்கவும், சட்டத்துக்கு விரோதமான பரிசு திட்டங்கள், லாட்டரி திட்டங்கள், குலுக்கல் போட்டிகள் நடத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் மேற்படி சட்டங்களுக்கு விரோதமாக தங்களுடைய வணிகத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தில் பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்துகிறார்கள்.

சட்டத்துக்கு புறம்பானது

எனவே பண்டிகை காலங்களில் வணிக நிறுவனங்கள், அவர்களின் லாப நோக்கத்தில் பரிசு குலுக்கல் நடத்துவது சட்டத்துக்கு புறம்பானது. நுகர்வோர்கள் அவற்றில் பங்கேற்று ஏமாற வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.


Next Story