கொதிகலன் குழாயில் பழுது வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு


கொதிகலன் குழாயில் பழுது வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2018 10:45 PM GMT (Updated: 13 Jun 2018 6:01 PM GMT)

வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது காரணமாக மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி,

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 2 நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2–ம் நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1200 மெகாவாட்டும், மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 2–ம் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2 நிலைகளில் தற்போது மொத்தம் 1230 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் செய்யப்படுகிறது.


Next Story