சவ ஊர்வலத்தில் தகராறு; 3 பேருக்கு வெட்டு


சவ ஊர்வலத்தில் தகராறு; 3 பேருக்கு வெட்டு
x
தினத்தந்தி 13 Jun 2018 3:45 AM IST (Updated: 13 Jun 2018 11:31 PM IST)
t-max-icont-min-icon

சவ ஊர்வலத்தில் தகராறு காரணமாக 3 பேருக்கு கத்தியால் வெட்டு விழுந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த தண்டலம் பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் ஒருவர் இறந்து போனார். அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக ராமதண்டலத்தை சேர்ந்த சத்யா (வயது 23) தன்னுடைய நண்பர்களான அன்பரசு (18), சேட்டு(23) ஆகியோருடன் சென்றார். அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த தீர்த்தம், அவரது நண்பர் அம்பேத் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு சத்யாவை தகாத வார்த்தையால் பேசி தாக்கினார்கள். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் சத்யாவின் தலை மற்றும் கையில் வெட்டியுள்ளனர்.

இதை அவரது நண்பர்களான அன்பரசு, சேட்டு ஆகியோர் தடுக்க வந்தனர். அவர்களையும் தீர்த்தம், அம்பேத் ஆகியோர் தலை மற்றும் கைகளில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

காயம் அடைந்த சத்யா, அன்பரசு, சேட்டு ஆகியோர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சத்யா புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தலைமறைவாக உள்ள தீர்த்தம், அவரது நண்பர் அம்பேத் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story