விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Jun 2018 3:00 AM IST (Updated: 13 Jun 2018 11:39 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி அடிக்கடி மாயமாவதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம் இரட்டைமங்கலம் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அன்பு (வயது 50). இவரது மனைவி அமுல் (45). விவசாயி. இவர் சிறிது மனநலம் சரியில்லாமல் இருந்தாதாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே சென்று விடுவார். மாயமாகும் மனைவியை அன்பு தேடி கண்டுபிடித்து அழைத்து வருவதுமாக இருந்தார். இதனால் அவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் அமுல் திடீரென்று மாயமானார். அவரை தேடி பார்த்த அன்பு மனைவி கிடைக்காததால் மனமுடைந்து அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மனமுடைந்த நிலையில் இருந்த அவர் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து அவரது மகள் சுமித்ரா அலறினார். அக்கம்பக்கதினர் இது கறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story