மாவட்ட செய்திகள்

குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை கலெக்டர் லதா எச்சரிக்கை + "||" + Action on parents to send children to work

குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை கலெக்டர் லதா எச்சரிக்கை

குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை கலெக்டர் லதா எச்சரிக்கை
குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் லதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை,

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து பஸ் நிலையம் வரை பள்ளி குழந்தைகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட, குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான மனிதச் சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லதா மனிதச் சங்கிலியை தொடங்கி வைத்து, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பான துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அலுவலர்.மைவிழிச்செல்வி வரவேற்று பேசினார். இதனைத்தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் கலெக்டர் லதா பேசியதாவது:– குழந்தை மற்றும் வளர்இளம் பருவ தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவோர்களை கண்டறிந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 2–வது முறையாக இச்சட்ட விதிகளை மீறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட குழந்தை தொழிலாளரின் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். கல்வி உரிமை சட்டத்தின்கீழ், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக தமிழ்நாட்டில் முதன்முறையாக சிவகங்கை அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. எனவே சிவகங்கை தொடர்ந்து குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக தொடர பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த விழாவில் வருவாய் அலுவலர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. நாங்குநேரியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
நாங்குநேரியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.
2. சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்கு முக்கியமானது - கலெக்டர் ஜெயகாந்தன் பேச்சு
கிராமப் பகுதியில் உள்ள சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்கு முக்கியமானது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
3. நாங்குநேரி அருகே திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
நாங்குநேரி அருகே திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த மழைநீர் வடிகால் தோண்டி சீரமைப்பு
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 25 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த மழைநீர் வடிகால்களை இந்தொ–திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தோண்டி சீரமைத்தனர்.
5. 2 மாத சம்பளம் வழங்கவில்லை: துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
2 மாத சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.