கஞ்சா கடத்திய வழக்கு: உதவி மக்கள் தொடர்பு அதிகாரி மதுரை சிறையில் அடைப்பு
ஆந்திராவில் இருந்து வத்தலக்குண்டுவிற்கு கஞ்சா கடத்தி வந்ததாக திண்டுக்கல் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி உட்பட 3 பேரை மத்திய போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் கைது செய்தனர்
மதுரை,
ஆந்திராவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிற்கு கஞ்சா கடத்தி வந்ததாக மத்திய போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் திண்டுக்கல் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி அருண் (வயது 33), ரவி (43), ஸ்ரீராம் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரும், 251 ½ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.
அருண் உள்பட 3 பேரிடமும் மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு போலீசாரின் அலுவலகத்தில் நேற்று விசாரித்தனர். பின்னர் அவர்களை மதுரை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 27–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்களை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா மூடைகளையும், காரையும் கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story