மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அ.தி.மு.க. பிரமுகர் மகன் பலி + "||" + Car collision on motorcycle; Digg The son of the elder son

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அ.தி.மு.க. பிரமுகர் மகன் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அ.தி.மு.க. பிரமுகர் மகன் பலி
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி, அ.தி.மு.க. பிரமுகரின் மகன் பலியானார். திருமணமான 17-வது நாளில் நடந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணாடி பாலகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழியின் 9-வது வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் ஆவர்.

இவர்களது மகன் ராஜகுரு (வயது 27). இவர் டிப்ளமோ படித்துவிட்டு ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு காற்றாலையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.


இவருக்கும் தாழக்குடியை அடுத்த பூலாங்குழி பகுதியை சேர்ந்த மெர்லின் ஷீலா(24) என்பவருக்கும் திருமணம் நடந்தது. மெர்லின் ஷீலா தாழக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ராஜகுரு தினமும் காலையில் தனது மோட்டார்சைக்கிளில் மனைவியை அழைத்து சென்று பள்ளியில் விட்டு, மாலையில் அழைத்து வருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மனைவியை அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ராஜகுரு சென்றார். அவர், ஆரல்வாய்மொழி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலை அடுத்த தோப்பூர் விலக்கு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜகுரு காரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுபற்றி அப்பகுதியினர் ராஜகுருவின் பெற்றோருக்கும், ஆரல்வாய்மொழி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பெற்றோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி விரைந்து வந்தார். அப்போது, ராஜகுருவின் அருகில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரின் பதிவெண் பலகை கிடந்தது. உடனே, அதை கைப்பற்றி இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது அந்த கார் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் நடந்த 17-வது நாளில் அ.தி.மு.க. பிரமுகரின் மகன் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சத்திரத்தில் லாரி மீது பஸ் மோதல்; கண்டக்டர் சாவு 6 பேர் படுகாயம்
புதுச்சத்திரத்தில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை: மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பலி
தமிழகத்தின் பல இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 5 பேர் பலியானார்கள்.
3. பள்ளி பஸ் படிக்கட்டில் சிக்கி தாய் கண் முன்னே சிறுவன் பலி
பள்ளி பஸ் படிக்கட்டில் சிக்கி தாய் கண் முன்னே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
4. ஜெர்மனியில் விமானம் மோதி 3 பேர் பலி
ஜெர்மனியில் விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. மார்த்தாண்டம் அருகே வேன்–ஆட்டோ மோதி 2 பேர் பலி: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சி
மார்த்தாண்டம் அருகே வேன்–ஆட்டோ மோதி 2 பேர் பலியான விபத்து தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.