மாவட்ட செய்திகள்

கல்லூரி செல்ல விரும்பாத மாணவி விஷம் குடித்து தற்கொலை + "||" + A student who does not want to go to college is poisoned by poison

கல்லூரி செல்ல விரும்பாத மாணவி விஷம் குடித்து தற்கொலை

கல்லூரி செல்ல விரும்பாத மாணவி விஷம் குடித்து தற்கொலை
செந்துறை அருகே கல்லூரி செல்ல விரும்பாத மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவரது மகள் வனஜா (வயது 18). இவர் சமீபத்தில் பிளஸ்-2 முடித்தார். இதனையடுத்து மகள் வனஜாவை முனியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சி செய்தார்.


ஆனால் வனஜா தனக்கு கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை என்று தந்தையிடம் கூறியுள்ளார். இதனை முனியன் கண்டித்ததால் மனமுடைந்த வனஜா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

சாவு

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வனஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ‘கஜா’ புயலில் வாழைகள் சேதம்: ரெயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை திருச்சியில் சோகம்
திருச்சியில் ‘கஜா‘ புயலால் வாழைகள் சேதமடைந்த வேதனையில், விவசாயி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
2. கடனை திருப்பி செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடியால் முந்திரி வியாபாரி தற்கொலை
நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் முந்திரி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
3. திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் விடுதியில் ஷாம்பு குடித்து தற்கொலைக்கு முயன்ற பயிற்சி மாணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. ஆரணியில் 2,427 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
ஆரணியில் 2 ஆயிரத்து 427 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
5. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை
சென்னை புறநகரில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறப்பதால் கல்லூரி மாணவ–மாணவிகள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். போலீசார் தீவிர நடவடிக்கைகள் மூலம் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.