மாவட்ட செய்திகள்

சேதுபாவாசத்திரத்தில் கடல் சீற்றம்: 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை + "||" + Sea fury in Sethu bazaar: 4,000 fishermen did not go to sea

சேதுபாவாசத்திரத்தில் கடல் சீற்றம்: 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

சேதுபாவாசத்திரத்தில் கடல் சீற்றம்: 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
சேதுபாவாசத்திரத்தில் கடல் சீற்றம் காரணமாக 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பாய்மர படகு, பைபர் படகு, கட்டுமரம் உள்ளிட்ட நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.


மீன்பிடி தடைகாலத்தையொட்டி விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறைக்காற்றும் வீசியது. இதன் காரணமாக வழக்கமாக மீன்பிடிக்க செல்லும் 4 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

சேதுபாவாசத்திரம் பகுதியில் கடல் சீற்றம் கடுமையாக உள்ளது. கடலில் ராட்சத அலைகள் அடிக்கடி எழுகின்றன. 4 அடி உயரம் முதல் 6 அடி உயரத்துக்கு அலைகள் எழுவதால் சிறிய வகை படகுகளை கடலுக்குள் எடுத்து செல்வது கடினம். எனவே மீன்பிடிக்க செல்லவில்லை.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் படகுகள் அந்தந்த மீனவ கிராமங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி கடலில் 2–வது நாளாக கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கன்னியாகுமரியில் 2–வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
2. கஜா புயல் எதிரொலி: வேதாரண்யத்தில் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கஜா புயல் எதிரொலி காரணமாக வேதாரண்யத்தில் 2 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் அப்பகுதியில் செய்யப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு மேற்கொண்டார்.
3. தஞ்சை மாவட்டத்தில் கடல் சீற்றம்: 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
தஞ்சை மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
4. கடலில் மூழ்கிய பெங்களூரு காதல் ஜோடி - தேடும் பணியில் போலீஸ் தீவிரம்
பெங்களூரு காதல் ஜோடி கடலில் மூழ்கியது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5. கடல் சீற்றத்தால் படகு போக்குவரத்து நிறுத்தம் விவேகானந்தர் மண்டபத்தில் தவித்த 500 பேர் மீட்பு
கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் விவேகானந்தர் மண்டபத்துக்கு திடீரென படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்தில் தவித்த சுமார் 500 பேர் மீட்கப்பட்டனர்.