அவசரகால முடிவுகள் எடுக்க 3 மந்திரிகள் அடங்கிய குழு அமைப்பு


அவசரகால முடிவுகள் எடுக்க 3 மந்திரிகள் அடங்கிய குழு அமைப்பு
x
தினத்தந்தி 14 Jun 2018 5:48 AM IST (Updated: 14 Jun 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தில் முதல்-மந்திரி இல்லாதபோது அவசரகால முடிவுகள் எடுக்க 3 மந்திரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போதும், பணி நிமித்தமாக பிற மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ளும்போதும் மாநிலத்தில் அவசரகால முடிவெடுக்க 3 மந்திரிகள் அடங்கிய குழுவை அமைத்து மாநில அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

வருவாய் துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், நிதி மந்திரி சுதிர் முங்கண்டிவார் மற்றும் நீர்வளத்துறை மந்திரி கிரிஷ் மகாஜன் ஆகியோர் இந்த மந்திரிகள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதன்படி முதல்-மந்திரி இல்லாத காலகட்டத்தில் இந்த குழுவினர் மாநிலத்தில் நிர்வாக முடிவுகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story