வீட்டில் வெடித்த கலவரம்
சலுகைக்காக பெயரை மாற்றிய பெண்ணால் வீட்டில் கலவரம் நடந்துள்ளது.
ரஷியாவில் இயங்கி வரும் மிகப்பெரிய லாயல் சூப்பர் மார்க்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அவரவர் பெயரோடு சூப்பர் மார்க்கெட்டின் பெயரையும் சட்டப்படி மாற்றிக்கொள்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தனர். அப்படி சலுகைக்காக தங்களது பெயரை மாற்றியவர்களில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசிக்கும் பெண்ணும் ஒருவர். ஆனால் இவர் கணவரிடம் அனுமதி பெறாமல் பெயரை மாற்றிவிட்டார். இந்த விஷயம் கணவருக்கு தெரியவர பெரிய கலவரமே நடந்திருக்கிறது. மனைவிக்கு மிகவும் பிடித்த காரை உடைத்து நொறுக்கி, அதன் மீது கான்கிரீட் கலவைகளையும் கொட்டிவிட்டாராம்.
‘‘நமக்கு பிடித்த ஒன்று பிடிக்காமல் போனால் எப்படி இருக்கும் என்பதை என்னுடைய மனைவிக்கு செய்து காண்பித்திருக்கிறேன்’’ என்று ஆணவமாகச் சிரித்து வீடியோ ஒன்றையும் வெளியிட, அது ரஷியாவை தாண்டியும் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story