விற்காத வீட்டை வித்தியாசமாக விற்றவர்
ரூ.1500-யை செலுத்தி ஒரு டிக்கெட் வாங்கினால், குலுக்கல் முறையில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு வீடு வழங்கப்படும் என்ற சலுகையை அறிவிக்க, அது ஜியோ சிம் கார்ட் சலுகையை மிஞ்சும் அளவிற்கு பிரபலமாகியிருக்கிறது.
இங்கிலாந்தில் வசிக்கும் டன்ஸ்டன் லோவ், 2011-ம் ஆண்டு மூன்றரை கோடி ரூபாய்க்கு 6 படுக்கையறைகள் கொண்ட மிகப் பெரிய வீட்டை ஆசையாக வாங்கினார். அதற்குப் பிறகு அந்த வீட்டுக்கு ஏராளமாகச் செலவு செய்து புது வீட்டைப் போல மாற்றினார். அந்த வீட்டில் மூன்று ஆண்டுகளே அவரால் நிம்மதியாக வாழ முடிந்தது. கடன் பிரச்சினை அளவுக்கு அதிகமாக, வீட்டை விற்க முடிவு செய்தார். ஆறரை கோடி ரூபாய்க்கு வீடு என்று விளம்பரம் செய்தார். ஆனால் வீட்டை வாங்குவதற்கு ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை. விலையை குறைத்து பார்த்தார், அப்போதும் பலனில்லை. அதனால் அதிரடி சலுகையை அறிவித்துவிட்டார். அது என்ன தெரியுமா...? ரூ.1500-யை செலுத்தி ஒரு டிக்கெட் வாங்கினால், குலுக்கல் முறையில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு வீடு வழங்கப்படும் என்ற சலுகையை அறிவிக்க, அது ஜியோ சிம் கார்ட் சலுகையை மிஞ்சும் அளவிற்கு பிரபலமாகியிருக்கிறது. இதுவரை 4 கோடி ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்றிருக்கிறதாம்.
“டிசம்பர் முதல் தேதிதான் அதிர்ஷ்டசாலியைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம். அதுவரை வித விதமாகப் போட்டிகளை அறிவித்து, அதற்கான கட்டணங்களையும், டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் வைத்து வீட்டுக்கான தொகையை எடுத்துவிடுவேன். குறைந்தது 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி விற்றால் 8 கோடி ரூபாய் கிடைத்துவிடும். நான் வீட்டை விற்க நினைத்த தொகையை விட அதிகமான லாபம் கிடைக்கும். அதனால் அதிர்ஷ்டசாலிக்கு இலவசமாக வீட்டைக் கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சியே!” என்கிறார் டன்ஸ்டன்.
Related Tags :
Next Story