பதற வைத்த பண விளையாட்டு
தனியாக இருந்த மகன் வீட்டில் வைத்திருந்த பணத்தை விளையாட்டு பொருளாக மாற்றி அதிர்ச்சி கொடுத்துவிட்டான்.
சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் வசிக்கும் காவோவும், அவரது மனைவியும் தங்கள் 5 வயது மகனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியே சென்று வந்திருக்கிறார்கள். தனியாக இருந்த மகன் வீட்டில் வைத்திருந்த பணத்தை விளையாட்டு பொருளாக மாற்றி அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டான். 4.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கரன்சிகளை துண்டு துண்டாகக் கிழித்து எறிந்திருக்கிறான். அந்த பண குப்பைகளுக்கு நடுவே 5 வயது மகன் ஆனந்தமாக விளையாடியிருக்கிறான். அதை பார்த்து இருவரும் பதறிபோய்விட்டார்கள். ஒவ்வொரு கரன்சியும் 3, 4 துண்டுகளாகக் கிழிக்கப் பட்டிருந்ததால் அதை ஒட்டவும் முடியாமல், வங்கியில் திருப்பி கொடுக்கவும் முடியாமல் அந்த தம்பதியர் திண்டாடியிருக்கிறார்கள்.
‘‘என் மகன் மீது குற்றம் சுமத்த மாட்டேன். அவனுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும்” என்கிறார் காவோ.
Related Tags :
Next Story