பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகை பொது மேலாளர் தகவல்


பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகை பொது மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2018 2:00 AM IST (Updated: 14 Jun 2018 6:51 PM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகை வழங்கப்பட்டு உள்ளது என பொது மேலாளர் முருகானந்தம் தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகை வழங்கப்பட்டு உள்ளது என பொது மேலாளர் முருகானந்தம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

சிறப்பு சலுகைகள்

பி.எஸ்.என்.எல். தனது 2ஜி மற்றும் 3ஜி பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வருகிற 20–ந் தேதி வரை ரூ.110–க்கு செய்யப்படும் டாப்–அப்களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறது. இந்த சலுகை சி–டாப்அப் மற்றும் வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப்–அப்களுக்கு மட்டும் பொருந்தும்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ‘ஈத்–முபாரக்‘ STV786 என்ற புதிய சிறப்பு டேட்டா கட்டண வவுச்சர் (STV) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 150 நாட்கள் வேலிடிட்டி உள்ள சிறப்பு டேட்டா கட்டண வவுச்சர் 786 மூலம் செய்யப்படும் டாப்–அப்களுக்கு வருகிற 26–ந் தேதி வரை தினமும் இலவசமாக 2ஜிபி, 3ஜிபி டேட்டா பெறலாம்.

100 எஸ்.எம்.எஸ்.

மேலும் நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்களுக்கும் அளவற்ற கால்களும் ரோமிங்கிலும் அளவற்ற அவுட் கோயிங் கால்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் தினமும் இலவசமாக 100 எஸ்.எம்.எஸ்.வரை அனுப்பலாம். இதை சி.டாப் அப், வெப் போர்டல் மற்றும் செல்ப்கோர் மூலமாக ஆக்டிவேட் செய்யலாம்.

பதஞ்சலி நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்காக அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 5–ந் தேதி வரை ஒரு வருட வேலிடிட்டியுடன் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story