குரோம்பேட்டையில் ஆடையில் தீப்பிடித்து விதவைப்பெண் பலி


குரோம்பேட்டையில் ஆடையில் தீப்பிடித்து விதவைப்பெண் பலி
x
தினத்தந்தி 15 Jun 2018 3:30 AM IST (Updated: 15 Jun 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டையில் ஆடையில் தீப்பிடித்ததில் விதவைப்பெண் பலியானார். வீட்டில் விளக்கு ஏற்றும்போது விளக்கு ஆடையில் சரிந்து விழுந்ததில் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, ராதா நகர், ரங்கநாதன் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 37). இவருடைய கணவர் பிரசாத் உயிரிழந்து விட்டதால், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டில் விளக்கு ஏற்றினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக விளக்கு சரிந்து விழுந்ததில் லட்சுமி அணிந்து இருந்த ஆடையில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் அவர் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் வேதனை தாங்கமுடியாமல் அவர் அலறினார்.

இதைக்கேட்டு அங்கு இருந்தவர்கள் விரைந்து வந்து பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் பரிதாபமாக லட்சுமி உயிரிழந்தார். இதுபற்றி சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story