மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் + "||" + Awareness Rally for World Blood Donation Day at Perambalur

பெரம்பலூரில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

பெரம்பலூரில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
பெரம்பலூரில், உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பெரம்பலூர்,

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரை அருகே தொடங்கிய ஊர்வலம், பழைய பஸ் நிலையம் வழியாக தாசில்தார் அலுவலகம் அருகே சென்று முடிவடைந்தது.


ஊர்வலத்தில் தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர்.

ஊர்வலத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலரும், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனருமான டாக்டர் சம்பத், மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் சிரில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மருத்துவ அலுவலர் திவ்யா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், மாவட்ட நம்பிக்கை மைய மேற்பார்வையாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் சாலை விபத்துக்களை தவிர்க்கலாம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேச்சு
டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் பெரும்பாலான சாலை விபத்துக்களை தவிர்க்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
2. வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சையில், தொழிற்சங்கத்தினர் ஊர்வலம் ரெயில் மறியல் செய்ய முயன்ற 22 பேர் கைது
வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர். ரெயில் மறியல் செய்ய முயன்ற விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தில் ஓய்வுபெற்ற தபால்காரர் சைக்கிளில் சென்று பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தில் ஓய்வு பெற்ற தபால்காரர் நெல்சன் பிரகாஷ் ஈடுபட்டுள்ளார். அவர், சைக்கிளில் சென்று பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
4. விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் கூறினார்.
5. பனை மரங்களை காக்க வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மணப்பாறையில் வரவேற்பு
பனை மரங்களை காக்க வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிள்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மணப்பாறை வந்த அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.