கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று அரசிடம் வலியுறுத்துவோம் திருநாவுக்கரசர் உறுதி


கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று அரசிடம் வலியுறுத்துவோம் திருநாவுக்கரசர் உறுதி
x
தினத்தந்தி 15 Jun 2018 4:00 AM IST (Updated: 15 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று தமிழக அரசிடம் வலியுறுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

திருமானூர்,

அரியலூரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள திருமானூர் வழியாக வந்த அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் திருமானூர் கொள்ளிடம் பாலத்தில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினரை சந்தித்தார்.

அப்போது, பாலத்தில் இருந்து ஆற்றை பார்வையிட்ட அவர், திருமானூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினரிடம் கேட்டறிந்தார்.

அரசிடம் வலியுறுத்துவோம்

பின்னர், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று தமிழக அரசிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துவோம், என்று நீராதார பாதுகாப்பு குழுவினரிடம் தெரிவித்தார். முன்னதாக கொள்ளிடம் நீராதாரக்குழு மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமானூர் பஸ் நிலையத்தில் திருநாவுகரசருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story