மாவட்ட செய்திகள்

வேதாரண்யம் அருகே தீயில் எரிந்து 2 வீடுகள் சாம்பல் ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம் + "||" + Around 2 lakh houses were destroyed in the fire near Vedaranyam

வேதாரண்யம் அருகே தீயில் எரிந்து 2 வீடுகள் சாம்பல் ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்

வேதாரண்யம் அருகே தீயில் எரிந்து 2 வீடுகள் சாம்பல் ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்
வேதாரண்யம் அருகே தீயில் எரிந்து 2 வீடுகள் சாம்பலானது. இந்த தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு, மெயின்ரோட்டில் வசிப்பவர் முருகையன் (வயது60). இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் மனோகரன் (55). இந்த நிலையில் நேற்று மதியம் முருகையன் வீட்டில் சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக கூரையில் தீப்பிடித்தது. இந்த தீ மனோகரன் வீட்டுக்கும் பரவியது. இதில் 2 வீடுகளிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் 2 வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 2 பேருக்கும் அரசின் நிவாரண உதவிகளை தாசில்தார் சங்கர் வழங்கினார். 

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை மாநகராட்சி மைதானத்தில் மரக்கிளைகள் தீயில் எரிந்து சாம்பல்
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 11 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் உள்ளது. கஜா புயலால் தஞ்சை நகரில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன.
2. திருச்சி மாநகராட்சியால் ‘டெங்கு’ கொசு புழுக்கள் இல்லாத 50 வீடுகள் கண்டறிந்து கவுரவிப்பு
திருச்சி மாநகராட்சியால் ‘டெங்கு’ கொசு புழுக்கள் இல்லாத 50 வீடுகள் கண்டறிந்து கவுரவிக்கப்பட்டது.
3. வீடுகள், நிறுவனங்களில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் - ராஜபாளையம் நகராட்சி கமி‌ஷனர் எச்சரிக்கை
ஆய்வின்போது வீடுகள், நிறுவனங்களில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என ராஜபாளையம் நகராட்சி கமி‌ஷனர் தெரிவித்துள்ளார்.