61 நாட்கள் தடை காலம் முடிந்தது: ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்கிறார்கள்
61 நாட்கள் தடை காலம் முடிந்ததால் ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லஉள்ளனர். பாம்பன் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இதனால் 61 நாட்கள் விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்ல மத்திய-மாநில அரசால் தடை விதிக்கப்பட்டுஉள்ளது. அது போல் இந்த ஆண்டின் தடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதியில் இருந்து தொடங்கியதை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் விசைப் படகுகளுக்கான தடை காலமானது நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. தடை காலம் முடிவடைந்தாலும் வெள்ளிக்கிழமை விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் விடுமுறை நாளாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் தடை காலம் முடிந்தும் ராமேசுவரத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளன.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அல்லது இரவில் பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க செல்ல ராமேசுவரத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லஉள்ளனர். இதையடுத்து மீனவர்கள் வலை, ஐஸ் பாக்ஸ், மடி பலகை உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை படகில் ஏற்றி கடலுக்கு செல்ல தயாரானார்கள். 61 நாட்கள் தடை காலம் முடிந்து விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்லஉள்ளதால் இறால் மீன்கள் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களும் அதிகஅளவில் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.
61 நாள் தடை காலம் முடிவடைந்து மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் மிகுந்த எதிர் பார்ப்புடனும், ஆர்வமாக இருந்த நிலையில் பாம்பனில் விசைப் படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு பலகையில் எச்சரிக்கை அறிவிப்பும் எழுதப்பட்டுஉள்ளது.
அந்த அறிவிப்பில் காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாலும்,15 அடி உயரம் வரை கடல் அலை எழும் என்பதாலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு எச்சரிக்கையால் தென் கடலான மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டிய பாம்பன் மீனவர்கள் மிகுந்த வருத்தத்திலும், ஏமாற்றத்துடனும் இருந்து வருகின்றனர்.

Related Tags :
Next Story