புதுவைக்கு பெண் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நியமனம்
போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் மாற்றப்பட்டு புதுவை மாநிலத்தில் முதல் முறையாக பெண் ஒருவர் டி.ஜி.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவர் சுனில்குமார் கவுதம். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் புதுவை போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் அவர் நேற்று திடீரென்று டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக டெல்லியில் பணியாற்றி வரும் 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பெண் அதிகாரியான சுந்தரி நந்தா புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார். அப்போது அவர் டெல்லிக்கு செல்ல இருக்கும் தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புதுவை மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தரி நந்தா விரைவில் புதுச்சேரி வந்து பொறுப்பினை ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது. புதுச்சேரி மாநிலத்தின் புதிய டி.ஜி.பியாக பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story