பால் விலை குறைகிறது கூட்டுறவு சங்கத்தினர் திடீர் முடிவு


பால் விலை குறைகிறது கூட்டுறவு சங்கத்தினர் திடீர் முடிவு
x
தினத்தந்தி 15 Jun 2018 5:38 AM IST (Updated: 15 Jun 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கூட்டுறவு சங்கத்தினர் பால் விலையை குறைக்க முடிவு செய்துள்ளனர்.

புனே,

சர்வதேச அளவில் பால் பொருட்களுக்கான விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதன் தாக்கம் மராட்டியத்திலும் எதிரொலித்தது. பால் உற்பத்தியாளர்கள் பலர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதுதவிர பிற மாநில பால் நிறுவனங்களான ‘அமுல்’, ‘நந்தினி’ உள்ளிட்டோரின் போட்டியும் பால் உற்பத்தியாளர்களை வாட்டி வந்தது. இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டும் தினசரி சுமார் 30 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை மராட்டியத்தில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் புனே மாவட்டம் பரமதியில் 22 தனியார் பால்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பை தொடர்ந்து சந்தையை தக்க வைக்க பால் விலையை ரூ.2 முதல் ரூ.4 வரை குறைக்க பால் உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர்.

இதன்படி வரும் 21-ந் தேதி முதல் கோலாப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமான ‘கோகுல்’ தான் உற்பத்தி செய்யும் பால் விலையை ரூ.2 குறைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. இது குறித்து ‘கோகுல்’ நிறுவனத்தின் தலைவர் விஷ்வாஸ் பாட்டீல் கூறுகையில், பால் பொருட்களுக்கான சந்தையை தக்கவைத்து விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். 

Next Story