2019 நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் மோடிக்கே வாக்களிப்பார்கள் முதல்-மந்திரி உறுதி


2019 நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் மோடிக்கே வாக்களிப்பார்கள் முதல்-மந்திரி உறுதி
x
தினத்தந்தி 15 Jun 2018 5:47 AM IST (Updated: 15 Jun 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் பிரதமர் மோடிக்கே வாக்களிப்பார்கள் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதிபட தெரிவித்தார்.

மும்பை,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது முதல்-மந்திரி பட்னாவிஸ் அங்குள்ள தொழில் முதலீட்டாளர்கள், அமெரிக்கவாழ் இந்தியர்கள் உள்ளிட்டோரை சந்தித்து வருகிறார். அமெரிக்க பயணத்தை தொடர்ந்து அவர் கனடாவுக்கு செல்ல இருக்கிறார்.

இந்தநிலையில் நியூயார்க் நகரில் நிருபர்களை சந்தித்த முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறியதாவது:-

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கே வாக்களிப்பார்கள். ஏனெனில் சுதந்திரமடைந்த 67 ஆண்டுகளில் சாதிக்க முடியாத பல விஷயங்களை வெறும் 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்து காட்டியுள்ளார். அதற்காக கடந்த 67 ஆண்டுகளில் எதுவும் நடைபெறவில்லை என நான் கூறவில்லை. ஆனால் இதுவரையில் யாரும் சிந்தித்து பார்த்திராத ஒரு புதிய பயணத்தை நமது நாடு தொடங்கி உள்ளது.

நாட்டின் உள்கட்டுமானம், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை பலப்படுத்தும் அதேவேளையில் தனிநபர் கழிவறைகள் கட்டுதல், அனைவருக்கும் வங்கிக்கணக்கு உள்ளிட்ட சாதாரண குடிமகன்களுக்கான திட்டங்களிலும் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story