புளியங்குடி அருகே லோடு ஆட்டோ– மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி 2 பேர் படுகாயம்
புளியங்குடி அருகே லோடு ஆட்டோ– மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
புளியங்குடி,
புளியங்குடி அருகே லோடு ஆட்டோ– மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர்நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சொக்கம்பட்டி திரிகூடபுரம் சேர்மன் தெருவை சேர்ந்தவர் நிக்சன் மகன் பிராங்களின் (வயது 25). அதே பகுதி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் மாரிமுத்து மகன் மகேந்திரன் (21), மாடசாமி மகன் பட்டமுத்து (22). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
நேற்று காலையில் ஒரே மோட்டார்சைக்கிளில் 3 பேரும் கடையநல்லூருக்கு சென்றுவிட்டு திரிகூடபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். முத்துசாமிபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே பால் ஏற்றி வந்த லோடு ஆட்டோவும், அவர்களது மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
ஒருவர் பலிஅவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பிராங்களின் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.