நெல்லை டவுனில், 20–ந்தேதி தமிழக அரசின் சாதனை விளக்க பொருட்காட்சி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்


நெல்லை டவுனில், 20–ந்தேதி தமிழக அரசின் சாதனை விளக்க பொருட்காட்சி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 16 Jun 2018 2:45 AM IST (Updated: 15 Jun 2018 7:34 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் தமிழக அரசின் சாதனை விளக்க பொருட்காட்சி வருகிற 20–ந் தேதி தொடங்குகிறது. அமைச்சர் கடம்பூர் ராஜூ பொருட்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

நெல்லை, 

நெல்லை டவுனில் தமிழக அரசின் சாதனை விளக்க பொருட்காட்சி வருகிற 20–ந் தேதி தொடங்குகிறது. அமைச்சர் கடம்பூர் ராஜூ பொருட்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

அரசு பொருட்காட்சி

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி பொருட்காட்சி திடலில் அரசு பொருட்காட்சி வருகிற 20–ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்குகிறார். பிரபாகர் எம்.பி. முன்னிலை வகிக்கிறார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வரவேற்று பேசுகிறார்.

அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பொருட்காட்சியை திறந்து வைக்கிறார். விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் நன்றி கூறுகிறார்.

பொருட்காட்சியில் பிரமாண்டமான முறையில் அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மைத்துறை, பள்ளி கல்வித்துறை, பொதுப்பணித்துறை, உள்ளிட்ட 27 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அங்கு அரசின் நலத்திட்ட உதவிகளை எப்படி பெறலாம்? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இதுதவிர ஆவின், குடிநீர் வாடிகால் வாரியம் போன்ற சார்பு நிறுவனங்கள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. பொருட்காட்சி 45 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story