டிரைவர்களை மிரட்டி கார்களை கடத்திய வழக்கில் 3 பேர் கைது
மாங்காடு மற்றும் திருவேற்காட்டில் டிரைவர்களை கத்தியை காட்டி மிரட்டி சினிமா தயாரிப்பாளர் உள்பட 2 பேரின் கார்களை கடத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 33). கால் டாக்சி டிரைவர். கடந்த 12-ந்தேதி இவர், மாங்காடு அருகே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை சர்வீஸ் சாலையையொட்டி காருடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மர்மகும்பல், டிரைவர் செல்வத்தை கத்தியை காட்டி மிரட்டி காரை கடத்திச்சென்று விட்டனர். இது தொடர்பாக மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்துல்அமீது(23) என்பவரை கைது செய்தனர். கடத்தப்பட்ட காரையும் மீட்ட போலீசார், தலைமறைவான மேலும் சிலரை தேடி வந்தனர்.
இதற்கிடையில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவு திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் சினிமா தயாரிப்பாளர் ராமச்சந்திரன் என்பவரது கார் டிரைவர் சந்திரனை, 5 பேர் கொண்ட கும்பல் கத்திமுனையில் மிரட்டி, காரை கடத்திச்சென்று விட்டனர். இதுபற்றி திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மாங்காடு போலீசார், கைதான அப்துல் அமீதுவிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்பேரில் கார் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குன்றத்தூர் மணஞ்சேரியை சேர்ந்த பாலா என்ற சமரபுரி(19), குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த விஜய்(19), அருள்தாஸ்(21) ஆகிய 3 பேரையும் மாங்காடு அருகே பதுங்கி இருந்தபோது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள்தான், சினிமா தயாரிப்பாளர் ராமச்சந்திரன் காரை திருடியதும் தெரிய வந்தது. இவர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து மாங்காடு அருகே டிரைவர் செல்வத்தை மிரட்டி காரை கடத்திச்சென்றனர். அப்போது அப்துல் அமீது மட்டும் போலீசில் சிக்கி விட இவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
அதன்பிறகு போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருக்க செலவுக்கு பணம் தேவைப்படுவதால் என்ன செய்யலாம்? என்று யோசித்தபடி கடந்த 13-ந்தேதி நள்ளிரவு திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி அருகே நடந்து வந்தபோதுதான், அங்கு காரில் அமர்ந்து இருந்த சினிமா தயாரிப்பாளர் ராமச்சந்திரனின் கார் டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி, அந்த காரை கடத்திச்சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கடத்தப்பட்ட சினிமா தயாரிப்பாளரின் காருடன் மேலும் 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும், கடத்தப்பட்ட காரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story