நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம்
நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் இறந்ததையடுத்து, குற்றவாளியை கைது செய்யக்கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலைந்து சென்றனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மேலஆசாரிபள்ளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற அய்யப்பன் (வயது 31), தொழிலாளி. இவருடைய நண்பர்கள் லியோ பாபு என்ற ஆசிட் பாபு, மணிகண்டன். இவர்கள் 2 பேரும் மேல ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் 3 பேரும் கூட்டாக சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிகிறது. இதே போல சம்பவத்தன்றும் அவர்கள் மது அருந்தியுள்ளனர்.
அப்போது மது வாங்க பணம் கொடுத்தது தொடர்பான அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லியோ பாபுவும், மணிகண்டனும் சேர்ந்து அய்யப்பனை கற்களாலும், தென்னை மட்டையாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அய்யப்பனின் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லியோபாபு மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் நேற்று முன்தினம் மதியம் பரிதாபமாக இறந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டது. படுகாயம் அடைந்த அய்யப்பன் இறந்துவிட்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி லியோபாபுவை கைது செய்தனர். போலீசாரால் தேடப்பட்டு வந்த மணிகண்டனும் நேற்று ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே நேற்று காலை அய்யப்பனின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. இதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பிணவறை முன்பு உறவினர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். பிரேத பரிசோதனை முடிந்தபிறகு அய்யப்பனின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டன் கைது செய்யப்பட்டதை அறியாத அய்யப்பனின் உறவினர்கள் தலைமறைவாக உள்ள மணிகண்டனையும் கைது செய்தால்தான் அய்யப்பனின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி கோஷங்களை எழுப்பியபடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த ஆசாரிபள்ளம் போலீசார், மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அய்யப்பனின் உறவினர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, அய்யப்பனின் உடலை பெற்றுச்சென்றனர். அதன்பிறகே அங்கு நிலவிய பரபரப்பு அடங்கியது.
கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக தானும், நண்பர் லியோபாபுவும் சேர்ந்து அய்யப்பனை கொலை செய்தோம் என்று மணிகண்டன் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டன், லியோபாபு ஆகியோர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story