விவேகானந்தர் மண்டபத்தில் 22 நாடுகளை சேர்ந்தவர்கள் நடத்திய யோகா நிகழ்ச்சி
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று 22 நாடுகளை சேர்ந்த 60 பேர் இணைந்து நடத்திய யோகா நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.
கன்னியாகுமரி,
இதில் கலந்துகொண்டு யோகாசனம் செய்வதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தோனேசியா, போலந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 22 நாடுகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 60 யோகா ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நேற்று முன்தினம் கேரள தலைநகர் திருவனந்தபுரம் வந்தனர்.
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட அவர்கள், 2 பஸ்களில் நேற்று கன்னியாகுமரி வந்தனர். அவர்களுக்கு குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா அலுவலர் நெல்சன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், அவர்கள் தனி படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றனர். அங்கு மண்டபத்தை சுற்றிப்பார்த்த அவர்கள் மாலை 4 மணி அளவில், விவேகானந்தர் மண்டப வளாகத்தில் யோகா நிகழ்ச்சியை நடத்தினர். அதாவது பல்வேறு நாடுகளை சேர்ந்த 60 பேரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஆச்சரியப்படத்தக்க வகையில் அமைந்தது.
சூரிய நமஸ்காரம், கும்பிடு நமஸ்காரம் செய்து காட்டியதுடன், பல்வேறு யோகாசனங்களையும் ஆர்வமாக செய்தனர். இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். பலர் தங்கள் செல்போன்களிலும் படம் பிடித்தனர்.
யோகா கலை தொடர்பாக வெளிநாட்டு ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் கூறும் போது, “உடலுக்கும், மனதுக்கும் இளமையை கொடுக்கும் யோகா கலையை எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியம். புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் நாங்கள் இணைந்து யோகா நிகழ்ச்சியை நடத்தியதை சிறப்புக்குரியதாக கருதுகிறோம்“ என்றனர்.
பின்னர், அவர்கள் மாலையில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டனர். கேரள மாநிலம் ஆலப்புழை, குமரகம், தேக்கடி, மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, உலக யோகா தினமாக வருகிற 21-ந்தேதியன்று கொச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
மத்திய அரசின் ஆயுஸ் அமைப்பும், கேரள சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் யோகா நிகழ்ச்சி உலக யோகா தினமான வருகிற 21-ந்தேதி (வியாழக்கிழமை) கொச்சியில் நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொண்டு யோகாசனம் செய்வதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தோனேசியா, போலந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 22 நாடுகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 60 யோகா ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நேற்று முன்தினம் கேரள தலைநகர் திருவனந்தபுரம் வந்தனர்.
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட அவர்கள், 2 பஸ்களில் நேற்று கன்னியாகுமரி வந்தனர். அவர்களுக்கு குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா அலுவலர் நெல்சன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், அவர்கள் தனி படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றனர். அங்கு மண்டபத்தை சுற்றிப்பார்த்த அவர்கள் மாலை 4 மணி அளவில், விவேகானந்தர் மண்டப வளாகத்தில் யோகா நிகழ்ச்சியை நடத்தினர். அதாவது பல்வேறு நாடுகளை சேர்ந்த 60 பேரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஆச்சரியப்படத்தக்க வகையில் அமைந்தது.
சூரிய நமஸ்காரம், கும்பிடு நமஸ்காரம் செய்து காட்டியதுடன், பல்வேறு யோகாசனங்களையும் ஆர்வமாக செய்தனர். இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். பலர் தங்கள் செல்போன்களிலும் படம் பிடித்தனர்.
யோகா கலை தொடர்பாக வெளிநாட்டு ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் கூறும் போது, “உடலுக்கும், மனதுக்கும் இளமையை கொடுக்கும் யோகா கலையை எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியம். புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் நாங்கள் இணைந்து யோகா நிகழ்ச்சியை நடத்தியதை சிறப்புக்குரியதாக கருதுகிறோம்“ என்றனர்.
பின்னர், அவர்கள் மாலையில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டனர். கேரள மாநிலம் ஆலப்புழை, குமரகம், தேக்கடி, மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, உலக யோகா தினமாக வருகிற 21-ந்தேதியன்று கொச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story