காரிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.56.80 லட்சம் மதிப்பில் திட்ட பணிகள் - அமைச்சர் கே.பி. அன்பழகன் அடிக்கல் நாட்டினார்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.56.80 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் மகேந்திரமங்கலம் ஊராட்சி பெரிய ஒட்டுப்பட்டி, ஆதிதிராவிடர் காலனி ஆகிய இடங்களில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 புதிய மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட உள்ளது. இதேபோன்று சீங்கேரி மற்றும் ஜக்கசமுத்திரம் ஊராட்சி தொறிமலையான்கொட்டாய் கிராமம் ஆகிய இடங்களில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 புதிய மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் கட்டப்பட உள்ளன.
இந்த கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்நாட்டு விழா பூமிபூஜையுடன் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நாகராஜன், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு வைத்து திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இதேபோன்று காரிமங்கலம் ஒன்றியம் கண்டகபைல், பிக்கனஅள்ளி ஆகிய கிராமங்களில் புதிய ரேஷன்கடை கட்டிடங்கள் மற்றும் 2 இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி ஆகியவற்றையும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். காரிமங்கலம் ஒன்றியத்தில் மொத்தம் ரூ.56.80 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் இந்த திட்ட பணிகளை 6 மாதகாலத்திற்குள் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், தாசில்தார் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ரமணன், வடிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, பொன்னுவேல் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story