நரிக்குறவ மாணவர்களை உண்டுஉறைவிட பள்ளியில் சேர்க்க மறுப்பு


நரிக்குறவ மாணவர்களை உண்டுஉறைவிட பள்ளியில் சேர்க்க மறுப்பு
x
தினத்தந்தி 16 Jun 2018 4:39 AM IST (Updated: 16 Jun 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு தாலுகா விளாப்பாக்கம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

வேலூர்,

 ஊர்ஊராக சென்று ஊசி, பாசி விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களுடைய குழந்தைகள் 20-க்கும் மேற்பட்டவர்களை காஞ்சீபுரம் பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்திருந்தனர்.

2 ஆண்டுகள் அவர்கள் அங்கு தங்கிப் படித்த நிலையில் தற்போது கோடைவிடுமுறை முடிந்து மீண்டும் தங்கள் குழந்தைகளை உண்டுஉறைவிட பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றனர். இந்த ஆண்டு கூடுதலாக குழந்தைகளை சேர்க்கவும் அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களை உண்டு உறைவிட பள்ளியில் சேர்க்க மறுத்து விட்டனர். நரிக்குறவ மாணவர்கள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சேர்க்குமாறு அவர்கள் கூறி உள்ளனர்.

இதனால் வேலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் அந்த சமூகத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் தங்கள் குழந்தைகள் காஞ்சீபுரம் பகுதி பள்ளியில் சேர்க்க மறுக்கப்படுவதாகவும், ஆனால் அதே உண்டு உறைவிட பள்ளியில் படிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர். 

Next Story