ஜவ்வாதுமலை கோடைவிழாவில் புதிதாக சாகச நிகழ்ச்சிகள் கலெக்டர் தகவல்
ஜவ்வாது மலை கோடை விழாவில் புதிதாக சாகச நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 21-வது ஜவ்வாது மலை கோடை விழா இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவானது ஜமுனாமரத்தூர்- காவலூர் சாலையில் திறந்த வெளி மைதானத்தில் நடைபெறுகிறது.
விழாவை இன்று காலை 10 மணியளவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், வேளாண்மைத் துறை அமைச்சர் ரா.துரைக்கண்ணு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
இதையடுத்து அமைச்சர்கள் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகின்றனர். பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் 4 ஆயிரத்து 806 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். கோடை விழா சிறப்பாக நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
விழாவை முன்னிட்டு ஜமுனாமரத்தூர் ஏரியில் முதல் முறையாக ‘ரிவர் கிராசிங்’, ‘கமாண்டோ நெட்’, ‘பர்மா பிரிட்ஜ்’, ‘வாட்டர் வாக்கிங் பால்’ போன்ற சாகச நிகழ்ச்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் முதல் முறையாக நாய் கண்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மிதிவண்டி படகு போட்டி, வாத்து பிடிக்கும் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
பல்வேறு துறைகளின் சார்பில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து இடைவிடாது தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் கோடை விழா நடைபெறும் மைதானத்தில் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும்.
இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story