முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்


முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்
x
தினத்தந்தி 16 Jun 2018 5:05 AM IST (Updated: 16 Jun 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பெங்களூரு,

இரவு கர்நாடக பவனில் தங்கும் அவர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதைத்தொடர்ந்து அவர் அன்று இரவு 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வந்தடைகிறார்.

கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு குமாரசாமி ஏற்கனவே ஒரு முறை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இப்போது அவர் 2-வது முறையாக டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

Next Story