பொது செயல் திட்டத்தை வகுக்க 5 பேர் குழு அமைக்கப்பட்டது
காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சிக்கு பொது செயல் திட்டத்தை வகுக்க வீரப்ப மொய்லி, டி.கே.சிவக்குமார் ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இரு கட்சிகளுக்கும் பொதுவான செயல் திட்டத்தை வகுப்பது என்றும், இதற்காக ஒரு குழுவை அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அந்த குழுவில் காங்கிரஸ் சார்பில் 3 பேரும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 2 பேரும் உறுப்பினர்களாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொது செயல் திட்டத்தை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவுக்கு மொத்தம் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த குழுவில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார் ஆகியோரும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் மந்திரி எச்.டி.ரேவண்ணா, சுப்பிரமணியா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து அடுத்த 10 நாட்களுக்குள் ஒரு பொது செயல் திட்டத்தை உருவாக்க உள்ளனர். அந்த பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் மாநில அரசு, திட்டங்களை அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story