உலக வங்கி தலைமை நிர்வாக அதிகாரியுடன் முதல்-மந்திரி பட்னாவிஸ் சந்திப்பு


உலக வங்கி தலைமை நிர்வாக அதிகாரியுடன் முதல்-மந்திரி பட்னாவிஸ் சந்திப்பு
x
தினத்தந்தி 16 Jun 2018 5:43 AM IST (Updated: 16 Jun 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக உலக வங்கி தலைமை நிர்வாக அதிகாரியை முதல்-மந்திரி பட்னாவிஸ் சந்தித்து பேசினார்.

மும்பை,

மராட்டியத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்கா உள்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் அமெரிக் காவில் நேற்று முன்தினம் உலக வங்கி தலைமை நிர்வாக அதிகாரி கிரிஸ்டாலினா ஜார்கிவாவை முதல்-மந்திரி பட்னாவிஸ் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது மும்பை பெருநகர பல்நோக்கு போக்குவரத்து முனையம், கிராமப்புற வாழ்வாதார திட்டம் உள்ளிட்ட மாநிலத் தின் வளர்ச்சி திட்டங்களுக்கு உலக வங்கியிடம் அவர் உதவி கோரியதாக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழகம் சார்பில் சிறப்பான தலைமை பண்பிற்காக வழங்கப்படும் ‘டெவலப்மெண்ட்’ விருதுக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவதில் முதல்-மந்திரி பட்னாவிஸ் செயல்பாடுகளை பாராட்டும் வகையில் இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தலைமை பொறுப்பில் சிறப்பாக செயலாற்றும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனத்தை சேர்ந்த ஆளுமைகளை உலக அளவில் பரிசீலித்து ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் இந்த விருதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story