குற்றாலத்தில் படகு சவாரி அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்


குற்றாலத்தில் படகு சவாரி அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Jun 2018 3:30 AM IST (Updated: 16 Jun 2018 7:10 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் படகு சவாரியை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார்.

தென்காசி, 

குற்றாலத்தில் படகு சவாரியை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார்.

படகு சவாரி

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் அருமையாக உள்ளது. தினமும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் குற்றாலம்–ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் ஆண்டுதோறும் படகு சவாரி நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான படகு சவாரி தொடக்க விழா நேற்று காலை நடந்தது.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.பி., செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து படகு சவாரியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி, பிரபாகரன் எம்.பி., செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆகியோர் ஒரு படகில் ஏறி சவாரி செய்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்தனர். முதல் நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

முன்னதாக, படகு குழாம் அலுவலர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் பழனி, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் முத்துமாலை, அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், குற்றாலம் முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் கணேஷ் தாமோதரன், அட்மா தலைவர் கணபதி, அ.தி.மு.க. செங்கோட்டை நகர செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளி, ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார், தென்காசி முன்னாள் நகரசபை துணை தலைவர் சுடலை, குற்றாலம் இளைஞர் பாசறை சுரேஷ் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story