தூத்துக்குடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை


தூத்துக்குடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 17 Jun 2018 2:30 AM IST (Updated: 16 Jun 2018 7:53 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நேற்று காலை நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நேற்று காலை நடந்தது.

ரம்ஜான் பண்டிகை 

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பு கடந்த மாதம் 17–ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு இருந்து வந்தனர். நோன்பு நாட்களில் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வந்தனர். நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை சார்பில் பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள ஈத்கா தோட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. ஜாமியா பள்ளிவாசல் இமாம் அப்துல் அலிம் தலைமை தாங்கி தொழுகை நடத்தினார். இதில் தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான் கலந்து கொண்டு பேசினார்.

சிறப்பு தொழுகை 

பின்னர் ஜாமியா பள்ளிவாசல் இமாம் ஷேக் உதுமான் ஆலிம் தலைமையில் உலக மக்கள் நலனுக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். தொழுகை முடிவடைந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதேபோன்று ஜாகிர் உசேன் நகர், ரகுமத்நகர், ரகுமத்துல்லாபுரம், மேட்டுப்பட்டி, முத்தையாபுரம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமிய மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story