நெல்லை மேலப்பாளையத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
மேலப்பாளையத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நெல்லை,
மேலப்பாளையத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ரம்ஜான் சிறப்பு தொழுகை
முஸ்லிம்கள் நோன்பு முடிவடைந்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடினார்கள். இதையொட்டி மேலப்பாளையம் ஜின்னா திடலில் முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
இதில் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. மற்றும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
த.மு.மு.க.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில் மேலப்பாளையம் பஜார் திடல் மற்றும் அலங்கார் தியேட்டர் வளாகத்தில் தொழுகை நடைபெற்றது. பஜார் திடலில் இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்ட செயலாளர் அபுபக்கர் சித்திக் அல்தாபி சிறப்பு தொழுகையை நடத்தினார்.
அலங்கார் தியேட்டர் வளாகத்தில் மாநில பொறுப்பாளர் சிவகாசி முஸ்தபா தொழுகையை நடத்தினார். இந்த தொழுகைகளில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், செயலாளர் அலிப் பிலால் ராஜா, பொருளாளர் கம்புக்கடை சுல்தான், மேலப்பாளையம் பகுதி தலைவர் மைதீன் பாதுஷா, செயலாளர் பாதுஷா, பொருளாளர் அசன் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.டி.பி.ஐ.
எஸ்.டி.பி.ஐ. கட்சி, மஸ்ஜித் ஹூதா சார்பில் மேலப்பாளையம் கரீம் நகர் அல் மதீனா பள்ளிக்கூட திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சாகுல் அமீது உஸ்மானி தொழுகை நடத்தி பேசினார். இதில் மஸ்ஜித் ஹூதா செயலாளர் ஜாபர் அலி, பொருளாளர் ஜவஹர், அல்ஹூதா ஷரியத் கல்லூரி முதல்வர் மீரான் முகைதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக், நெல்லை மாவட்ட தலைவர் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் உள்ள ஈத்கா திடல், ரகுமானியா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், பிறை நகர் மஸ்ஜிதுல் அக்சா திடல் ஆகிய இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் பாளையங்கோட்டை உள்பட நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
Related Tags :
Next Story