புதியம்புத்தூரில் தி.மு.க. பொதுக்கூட்டம் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பங்கேற்பு
புதியம்புத்தூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கலந்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்,
புதியம்புத்தூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கலந்து கொண்டார்.
பொதுக்கூட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி ஜோசப்மோகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாடசாமி, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, நகர செயலாளர் லிங்கராஜ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சண்முகையா வரவேற்றார்.
‘நீட்‘ தேர்வு
கூட்டத்தில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசின் ‘நீட்‘ கொள்கை முடிவால் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க.வில் பாராளுமன்றத்தில் 50 எம்.பி.க்கள் இருந்தும் ‘நீட்’ தேர்வு சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்றார். அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வும் பேசினார்.
கூட்டத்தில், மாநில வக்கீல் அணி துணை செயலாளர் சூரியா வெற்றிகொண்டான், மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் வெற்றிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், பூபதி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பில்லா ஜெகன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story