ஸ்மார்ட் போன் வாங்க முடியாத ஏக்கத்தில் வி‌ஷம் குடித்து மாணவர் சாவு


ஸ்மார்ட் போன் வாங்க முடியாத ஏக்கத்தில் வி‌ஷம் குடித்து மாணவர் சாவு
x
தினத்தந்தி 17 Jun 2018 3:30 AM IST (Updated: 17 Jun 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் ஸ்மார்ட் போன் வாங்க முடியாத ஏக்கத்தில் மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கொத்தர் தெருவை சேர்ந்தவர் நாகநாதன்(வயது 48). இவர் பழக்கடை வைத்துள்ளார். இவருடைய மகன் நவீன்குமார் (17). பிளஸ்–2 படித்து வரும் நவீன்குமார் தனது தந்தையிடம் ஸ்மார்ட் போன் வாங்கித்தரும்படி கேட்டு வந்துள்ளார். தற்போது பணம் இல்லாததால் பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறினாராம். இதனால் ஸ்மார்ட் போன் வாங்க முடியாத ஏக்கத்தில் மாணவர் நவீன்குமார் வி‌ஷம் குடித்துள்ளார். அதனை தொடர்ந்து வயிற்று வலியால் துடித்த அவரை பெற்றோர்கள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துஉள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.


Related Tags :
Next Story