வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மசூதிகளில் முஸ்லிம்களின் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
வேலூர்,
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வேலூரில் நேற்று இஸ்லாமியர்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தினார்கள்.
வேலூர் ஆர்.என்.பாளையம் பெரிய மசூதி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். அதேபோல் வேலூர் டவுன் ராமநாயக்கன்பாளையம் பெரிய மசூதி, சின்ன மசூதி, கஸ்பா மசூதி, டிட்டர்லைன் மசூதி, சைதாப்பேட்டை மக்கா மசூதி, கானாறு மசூதி, மக்கானில் உள்ள மசூதி மற்றும் வேலூரில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
மசூதிகளில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர். இதேபோல் ஆம்பூர், வாணியம்பாடி, மேல்விஷாரம், பேரணாம்பட்டு உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
வேலூர் கோட்டையில் உள்ள மசூதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்பட 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோட்டைக்கு வந்த சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். அதன்பின்னரே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோட்டைக்கு வந்த கார், வேன் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

Related Tags :
Next Story