50 ஆண்டுகளுக்கு பின்னர் ஓட்டேரி ஏரி தூர்வாரப்படுகிறது
வேலூரின் மிகப்பெரிய ஏரியான ஓட்டேரி ஏரி 50 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது என்று கலெக்டர் ராமன் கூறினார்.
வேலூர்,
விவசாயம் வளம்பெற விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் அவசியமாகும். இந்த திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஏரி, கண்மாய்களில் இருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் ஓட்டேரியில் விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் எடுக்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமார், வேலூர் உதவி கலெக்டர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் தாசில்தார் பாலாஜி வரவேற்றார்.
முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி 210 விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுப்பதற்கான ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த ஏரி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வேலூரின் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் ஆழ்துளை கிணறு உள்பட பல்வேறு வழிகளில் வேலூர் மக்களின் குடிநீர் தேவை தீர்க்கப்பட்டது. எனவே ஓட்டேரி ஏரியின் தண்ணீர் தேவை குறைந்தது. அதனால் நாளடைவில் ஓட்டேரி ஏரி குடிநீருக்காக பயன்படுத்தப்படவில்லை.
தற்போது ஓட்டேரி ஏரி சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் தூர்வாரப்படுகிறது. தமிழகத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படவில்லை.
முதன் முறையாக வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி ஏரியில் இருந்து எடுக்க வண்டல் மண் எடுக்க பல்வேறு முயற்சிக்கு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு 3 அடி ஆழத்தில் 3½ லட்சம் கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் மண் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறதா? என வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இப்பகுதியை சேர்ந்த மக்கள் செங்கல் சூளை, பானைகள் செய்வதற்கு ஏரியில் இருந்து மண் எடுப்பதற்கு வழிமுறைகள் இருந்தால், அது குறித்து ஆலோசித்து அனுமதி வழங்கப்படும். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 4½ லட்சம் கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டேரி மற்றும் இடையன்சாத்து ஏரி மற்றும் பிற ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணி முடிவடைந்தால், அவை சுமார் 10 லட்சம் கன மீட்டராக இருக்கும்.
ஓட்டேரி ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஓட்டேரியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து ஓட்டேரி ஏரியில் இலவச வண்டல் மண் எடுக்கும் பணியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
பின்னர் நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசுகையில், “ஓட்டேரி ஏரியில் ஒரே அளவில் மண் எடுக்க வேண்டும். இதன்மூலம் ஏரியில் மழைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கும். நீர்வரத்து கால்வாய் தனிநபரின் பட்டா நிலம் வழியாக ஏரிக்கு வருகிறது. அவர் நீர்வரத்து கால்வாய் வழியாக ஏரிக்கு தண்ணீர் வருவதை தடை செய்கிறார். அந்த நிலத்தை நான் சொந்த செலவில் வாங்கி பொதுமக்களுக்கு வழங்க தயாராக உள்ளேன். ஆனால் நிலத்தின் உரிமையாளர் விற்க மறுக்கிறார். இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன்பாக ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். மேலும் ஓட்டேரி ஏரி அருகே உள்ள பூங்காவை பராமரித்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.
இதில், மாநகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் தேன்மொழி, பேரிடர் மீட்பு தாசில்தார் பூமா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சுகுமாரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story