பெங்களூருவில் 13-வது உலக தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு தொடங்கியது
பெங்களூருவில், 13-வது உலக தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு நேற்று தொடங்கியது. இதில் 9 நாடுகளை சேர்ந்த 47 பேர் பங்கேற்றனர்.
பெங்களூரு,
இந்தியாவில் முதல் முறையாக உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் பெங்களூரு அல்சூரில் உள்ள தமிழ்ச்சங்க அரங்கத்தில் 13-வது உலகத்தமிழ் பண்பாட்டு மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளான நேற்று காலை 9.30 மணிக்கு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கொடி ஏற்றப்பட்டதோடு, குத்து விளக்கேற்றி மாநாடு தொடங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தமிழ் மொழி, கலாசாரம் சார்ந்த ஆய்வரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகியவை நடந்தது. பல்வேறு தமிழ் அறிஞர்கள் இதில் கலந்துகொண்டு பேசினார்கள். சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கலாசார குழுவினரின் பறையாட்டம், சிலம்பாட்டம் உள்பட பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த மாநாட்டில் உலக தமிழ் பண்பாட்டு இயக்க தலைவர்(மலேசியா) ப.கு.சண்முகம் பேசியதாவது:-
உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் 1974-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றால் இந்த இயக்கத்தில் உள்ளவர்களின் தீவிர பங்களிப்பு தான் காரணம். தமிழ் மொழி, கலை, பண்பாட்டை அழியவிடாமல் பாதுகாப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாக உள்ளது. 2-வது நாளான நாளை(அதாவது இன்று) இயக்கத்தின் பொதுபேரவை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் உலகில் உள்ள தமிழர்களுக்கான பிரச்சினை, மொழி பிரச்சினை உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் பர்மா, இந்தோனேசியா, மொரிசீயஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழ் மொழியை கற்றுக்கொடுப்பதற்கான அமைப்புகள் இல்லை. இந்த நாடுகளில் தமிழ் மொழியை எவ்வாறு கற்றுக்கொடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். இந்த தீர்மானங்களை தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் உலக தமிழ் பண்பாட்டு இயக்கமே அதை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் துணை தலைவர்(பிரான்சு) விசு செல்வராஜா, மிக்கிஷெட்டி (தென்ஆப்பிரிக்கா), வேலுபிள்ளை (அமெரிக்கா), அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார் (இலங்கை) ஆகியோர் உரையாற்றினர்.
பின்னர், 13-வது உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மலரை மேயர் சம்பத்ராஜ் வெளியிட்டார். 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் வெவ்வேறு பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக, மாநாட்டுக்கான வரவேற்புரையை புவனேஸ்வரி சுந்தரவேலு நிகழ்த்தினார்.
மாநாட்டுக்கான ஏற்பாட்டை உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கர்நாடக கிளை பொதுச்செயலாளர் சுந்தரவேலு, பொருளாளர் எம்.ஜி.ஆர். மணி மற்றும் மாநாட்டு நிர்வாகிகள் மேற்கொண்டு இருந்தனர். விழாவில் நடிகர் கே.ராஜன், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் தி.கோ.தாமோதரன் மற்றும் அமெரிக்கா, பிரான்சு, இலங்கை உள்பட 9 நாடுகளை சேர்ந்த 47 பேரும், தமிழகம், கர்நாடகம் உள்பட பிற மாநில உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story