கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும்


கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Jun 2018 5:17 AM IST (Updated: 17 Jun 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு பூபசந்திராவில் வசிக்கும் பா.ஜனதாவின் கர்நாடக மாநில சிறுபான்மை பிரிவின் தலைவரான அப்துல் வீட்டிற்கு, அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா சென்றார்.

பெங்களூரு,

எடியூரப்பா உடன்  கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் ஆகியோரும் சென்றார்கள். பின்னர் அப்துலுக்கு, எடியூரப்பா ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. முதல்-மந்திரி பதவியை குமாரசாமிக்கு காங்கிரஸ் விட்டு கொடுத்துள்ளது. 5 ஆண்டுகளும் கூட்டணி ஆட்சி நீடிக்கும் என்று 2 கட்சிகளின் தலைவர்களும் கூறி வருகிறார்கள். அதனால் குமாரசாமி ஒரு ஆண்டு மட்டுமல்ல, 5 ஆண்டுகளும் முதல்-மந்திரியாக இருக்கட்டும். பா.ஜனதா சிறந்த எதிர்க்கட்சியாக இருக்கும். அரசு செய்யும் தவறுகளை சுட்டி காட்டும். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பா.ஜனதா தொடர்ந்து போராடும்.

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும். அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

Next Story