மராத்தி நடிகையின் இ-மெயிலுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை


மராத்தி நடிகையின் இ-மெயிலுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை
x
தினத்தந்தி 17 Jun 2018 5:50 AM IST (Updated: 17 Jun 2018 5:50 AM IST)
t-max-icont-min-icon

மராத்தி நடிகையின் இ-மெயிலுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த கட்டுமான நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்த பிரபல மராத்தி நடிகை ஒருவரின் இ-மெயிலுக்கு மர்மஆசாமி ஒருவர் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மேலும் தனது பெயர் சரங் ஜோஷி (வயது30) என பகிர்ந்து இருந்த அந்த நபர், உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். என்னை தொடர்பு கொண்டு பேசுங்கள் என தனது செல்போன் எண்ணையும் நடிகையின் இ-மெயிலுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை சகார் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். இதில் நடிகைக்கு இ-மெயிலில் ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த சரங் ஜோஷி கோலாப் பூரில் உள்ள கட்டு மான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். மும்பை அழைத்து வரப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story